
லக்னோ உனக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதைப் பெற்றுக் கொண்ட பிறகு பேசிய அவர், RR அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சந்தீப் ஷர்மாவுக்கு தான் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டு இருக்க வேண்டும். அவர் மட்டும் சிறப்பான மூன்று ஓவர்களை வீசவில்லை என்றால் நான் இந்த விருதை வாங்கி இருக்க முடியாது என தெரிவித்தார்.