
ஹாலிவுட் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை சிட்னி ஸ்வீனி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 26 வயதாகும் இவர் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக காரணமே படு கவர்ச்சியாக படத்தில் நடிப்பதால் தான். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் படங்களில் ஆடை இன்றி இருக்கும் காட்சிகள் நடிப்பதை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், நான் எப்போதும் என்னுடைய இயக்குனர்களை நம்புகிறேன். கதைக்கு தேவைப்பட்டதால் தான் அந்த காட்சியை வைக்கிறார்கள். படங்களில் ஆடை இல்லாமல் நடிக்க நான் வெட்கப்படவில்லை. தொடர்ந்து நிர்வாணமாக நடிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.