ஜார்கண்ட் மாநிலத்தில் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருந்த நிலையில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் அடுத்ததாக 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் கார்கே பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது, யோகி ஆதித்யநாத்தை ஆட்டுத்தோல் பொருத்திய ஓநாய் என்று கூறினார்.

பின்னர் பிரதமர் மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்த்து வருவதோடு எம்எல்ஏக்களை ஆடுகளை விலைக்கி வாங்குவது போல் வாங்குகிறார். அவர் எம்எல்ஏக்களை காசு கொடுத்து வாங்கி வரும் நிலையில் ஆட்டு மந்தையாகவே அவர்களை நடத்தி அவர்களுக்கு உணவு கொடுத்து கடைசியில் விருந்தாக்குவார் என்றார். அதன் பிறகு மோடி மற்றும் அமித்ஷா இருவரும் அம்பானி அதானி ஆகிய இருவருக்காக மட்டும்தான் அரசை நடத்துகிறார்கள். மேலும் தேசபக்தி பற்றி பேசும் பாஜக உண்மையில் நாட்டை பிளவுபடுத்தும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.