
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதாவது அங்கிதா மற்றும் அஜய் என்ற தலித் ஜோடி, கடந்த மார்ச் 5ஆம் தேதி அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், அந்த கோவிலின் பூசாரியான நாகேந்திர செல்வால், சாதி காரணமாக கோவில் கதவுகளை பூட்டி, அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததோடு , அவர்களை அடித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தம்பதியால் அன்று திருமணம் செய்ய முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து மணமகளின் தந்தை, மார்ச் 12ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பூசாரி நாகேந்திர செல்வாலுக்கு எதிராக எஸ்சி/எஸ்டி சமூகத்தின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.