
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரமணி. இவரை மதன் குமார் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் காதலை ஏற்க மறுத்த ரமணியை மதன்குமார் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில் “மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.