ஆசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனங்களுக்கான வயது வரம்பை தளர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பு பொது பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் மாற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வயது உச்சவரம்பு தளர்த்தப்படும் என  அறிவித்திருந்த நிலையில் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அதிகபட்ச வயது பொது பிரிவினருக்கு 40 மற்றும் விவர பிரிவினருக்கு 45 என இருந்தது குறிப்பிடத்தக்கது.