
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் இருக்க வேண்டும் என்பதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் புகைப்படத்தை பதிவேற்றும் பணியை ஆசிரியர்கள் செய்ய தேவையில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் அனைத்து தகவல்களையும் எமிஸ் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்பதால் ஆசிரியர்களின் பணி சுமை அதிகரித்து பாடம் கற்றுத் தர முடியவில்லை என்று புகார் எழுந்த நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தினால் மட்டும் போதும் வேறு பணி செய்யத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது