மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜெய்கான் நகரில் நேற்று முன்தினம் கூற காட்சிகளுடன் கொடூரமாக கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதாவது அவரின் ஆணுறுப்பு வெட்டப்பட்டதோடு அந்த ஆணுறுப்பை அவருடைய வாயில் திணித்து கொடூரமாக கொன்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் என்பதும் அவருடைய பெயர் சந்தாபீர் லாமா என்பதும் தெரியவந்தது.

இவருடைய குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் 7 பேர் மீது சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவ்வளவு கொடூரமாக ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.