தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிக்கும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, டாஸ்மாக் நிர்வாகம் தற்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகக் குடிமகன்களிடமிருந்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தவறு செய்யும் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகளைத் தடுக்கத் தவறும் பட்சத்தில் அந்தந்த மாவட்ட மேலாளர்களும் நேரடியாகப் பொறுப்பாக்கப்படுவார்கள் என்றும், ஆய்வுகளைத் தீவிரப்படுத்தப் பறக்கும் படை துணை ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த கிடுக்கிப்பிடி நடவடிக்கையால், இனி டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்குச் சரக்கு விற்றால் பணியாளர்களின் வேலைக்கே உலை வைக்கும் சூழல் உருவாகியுள்ளது.