19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 28-ந்தேதி தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தற்போது தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் மைதானத்தில் கடினமாக உழைத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த தொடக்க வீரர் யார் என்ற கேள்வி விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த கோலி, கிறிஸ் கெயில் தான் டி20 போட்டிகளில் உலகின் சிறந்த தொடக்க வீரர் என்று புகழாரம் சூட்டினார்.
<a href=”http://

“>
கெயிலுடன் இணைந்து பெங்களூரு அணியில் பல ஆண்டுகள் விளையாடிய அனுபவத்தின் அடிப்படையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.