இந்தியாவால் மே 8-ம் தேதி பாகிஸ்தானின் ட்ரோன் முயற்சி முற்றிலும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, கடும் அழுத்தத்தில் உள்ள பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா அசிப், தேசிய சபையில் எடுத்து சொன்ன சர்ச்சையான விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இந்திய ட்ரோன்கள் எங்கள் ராணுவத் தளங்களை கண்டறிய வந்தவையாக இருக்கலாம். அதனால், அதனை முன்கூட்டியே தடுக்காமல் விட்டோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

“நேற்றைய ட்ரோன் தாக்குதல் எங்கள் இடங்களை கண்டறிவதற்காகவே இருந்திருக்கலாம். இது ஒரு தொழில்நுட்ப விஷயம். முழுமையாக விளக்க முடியாது. அதனால் நாங்கள் அவற்றைத் தடுக்கவில்லை. எங்கள் ராணுவ இடங்கள் வெளிப்படக்கூடாது என்பதால்தான்…” என தெரிவித்தார்.

இந்திய பாஜக தேசிய பேச்சாளர் பிரதீப் பண்டாரி, X வலைதளத்தில் அந்த உரையின் வீடியோவைப் பகிர்ந்து, “இந்திய மிசைல்கள் தாக்கும் போது, உங்கள் பாதுகாப்பு தளங்கள் தானாகவே தெரிய வந்துவிடுகின்றன.

அது உங்கள் விருப்பத்தால் அல்ல, இந்தியாவின் துல்லியத்தால்” என விமர்சித்துள்ளார். அவருடைய உரை சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களையும், கேலிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மே 8 அன்று பாகிஸ்தான் இந்திய எல்லை நகரங்களை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்த முயன்றதற்குப் பதிலாக, இந்தியா பல இடங்களில் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது.

இதில் பாகிஸ்தானின் F-16 போர்விமானம் மற்றும் இரு JF-17 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இணையாக, பாகிஸ்தான் ஏவிய பிற ப்ராஜெக்டைல்களையும் இந்தியா வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது.