
குஜராத் மாநிலத்தில் உள்ள பச்சாவ் பகுதியில் சாராயம் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளை நிறத்தில் கார் ஒன்று வந்தது. அந்த காரை காவல்துறையினர் தடுத்தனர். ஆனால் காரில் இருந்தவர் காவல்துறையினர் மேல் காரை ஏற்றி அவர்களை கொலை செய்ய முயன்றுள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர் தப்பித்து விட்டனர்.
உடனடியாக அந்த காரை விரட்டிப் பிடித்த போலீசார் அவர்களை மடக்கினர். அப்போது காரை சோதனை செய்தபோது ஒரு நிமிடம் காவல்துறையினர் அதிர்ந்து போய்விட்டனர். ஏனெனில் அந்த காரில் இருந்தது சிஐடி பெண் கான்ஸ்டபிள். அதாவது காந்திதம் சிஐடி காவல் நிலையத்தில் சிஐடி கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த நீடா என்பது தெரியவந்தது. இவர் யுவராஜ் சிங் என்ற வாலிபருடன் சேர்ந்த சாராயம் கடத்தியுள்ளார். காரில் இருந்த போது நீடா மது போதையில் இருந்துள்ளார். இவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.