இணைய உலகில் அவ்வப்போது சில காணொளிகள் நம் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும். அந்த வகையில், மழலை மொழியில் சண்டையிட்டுக் கொள்ளும் சிறுவர்களின் புதிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

ஏற்கனவே ஒருமுறை சிறுவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் காணொளி வைரலான நிலையில், அதே சிறுவர்கள் மீண்டும் மோதிக்கொள்ளும் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த காணொளியில், ஒரு குழுவில் சிறுமிகளும், மற்றொரு குழுவில் இரண்டு சிறுவர்களும் அமர்ந்து கொண்டு தீவிரமாக விவாதிக்கின்றனர்.

 

அந்தச் சிறுவர்கள் எதற்காகச் சண்டையிடுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பது யாருக்கும் புரியவில்லை. ஆனால், அவர்களின் அந்த மழலை‌ மொழியும், பேசும்போது காட்டும் முக பாவனைகளும் பார்ப்பவர்களின் இதயங்களை வென்றுள்ளது.

“அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை என்றாலும், அந்த வீடியோ நம்மை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சிறுவர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பதில் சொல்லும் விதம், பெரியவர்கள் சண்டையிடுவதைப் போலவே மிமிக்ரி செய்வது போல் இருந்தாலும், அதில் கலந்திருக்கும் மழலைத்தனம் காண்போரை ரசிக்க வைத்துள்ளது. சண்டையையும் தாண்டி, அந்தச் சிறுவர்களின் கியூட் ரியாக்‌ஷன்களுக்காகவே இந்தக் காணொளி லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.