
ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி சேத்னா ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். அவரை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிறுமியின் தாய் தோலி தேவி செய்தியாளர்களை சந்தித்தபோது, தங்கள் மூன்று வயது மகள் நான்கு ஐந்து நாட்களாக ஆழ்துளை கிணற்றில் தான் இருப்பதாகவும் சாப்பிடவும் இல்லை என்றும் மாவட்ட ஆட்சியரின் குழந்தை இவ்வாறு சிக்கி இருந்தால் இவ்வளவு நாட்கள் ஆக விட்டிருப்பார்களா என்றும் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.