
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், “திமுக குடும்பக் கட்சி என இ.பி.எஸ். சொல்கிறார். ஆமாம், அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன் திமுக குடும்பக் கட்சிதான். கோடிக்கணக்கான குடும்பங்களை வாழவைக்கும் கட்சிதான் திமுக சம்மந்திக்கும், சம்மந்தியோட சம்மந்திக்கும் டெண்டர் கொடுத்து, ஐகோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் ஓடிட்டு இருக்கும் உங்களுக்கு, இதைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கு?” என தெரிவித்துள்ளார்.