தமிழ்நாட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலுடன் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம். அத்தியாவசிய தேவைகள் கருதி வெளியே சென்றால், கூட்டத்திற்குள் செல்ல வேண்டாம். மாஸ்க் போன்றவற்றை கடைபிடிக்கவும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனை செல்லுங்கள். இது காலாண்டு தேர்வு நேரம் என்பதால். மாணவர்களை பெற்றோர் எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும்.

மேலும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். “மழை பெய்யும் காலம் என்பதால், தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கும், அனைத்து துறை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களும் டிரம் மற்றும் குடங்களில் பிடித்து வைக்கப்படும் நீரை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.