அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விழா கமிட்டியினர் முறைகேடுகளில் ஈடுபட்டால் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மைதானத்திற்குள் ஜாதி, மத அரசியல் கட்சி சார்ந்த அடையாளங்களையும், கட்சியின் சின்னம் உள்ள ஆடை அணிவதையும் தடை செய்ய வேண்டும்.

மேலும் போட்டி முடிந்த பிறகு கணக்கு விவரங்களை மாவட்ட வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற வழக்கில் அரசின் உறுதியை ஏற்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.