
ஹைதராபாத்தில் பாஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் மதுபானக்கூடங்கள் ஏராளமான அளவில் உள்ளது. இங்குள்ள தனியார் மதுபானக்கூடங்களில் வாடிக்கையாளர்களை மகிழ்ப்பதற்காக பெண்கள் நடனம் ஆடுவார்கள். வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் ஆடுவதாக கூறப்படும் நிலையில் கூட்டமும் அலைமோதியது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை விடுமுறை தினத்தில் மதுபான கூடத்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் ஏராளமான பெண்கள் ஆபாசமாக நடனம் ஆடினார்.
அவர்களுடன் சேர்ந்து ஆண்களும் நடனமாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து விட்டனர். பின்னரங்க ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருந்த 42 பெண்கள் உட்பட 140 பேரை கைது செய்தனர். சம்பந்தப்பட்ட மதுபானக்கூடத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மதுக்கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள.