இன்றைய காலகட்டத்தில் விலைவாசிகள் தாறுமாறாக எதிரி வரும் நிலையில் மக்கள் அளவுக்கு அதிகமாக பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு சேமித்து வைக்கும் போது அதில் புழு மற்றும் வண்டுகள் வந்து விடுவது வழக்கம் தான். இவ்வாறு வாங்கி வைத்திருக்கும் பொருள்கள் வண்டுகள் காரணமாக சில நேரங்களில் வீணாகிவிடும். இதற்கான நிரந்தர தீர்வு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வேப்பிலை உணவுப் பொருட்களை பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. அதாவது வேப்பிலையை நிலையில் காய வைத்து அரிசி மற்றும் பருப்பு போட்டு வைத்திருக்கும் களன்களில் வேப்பிலை சருகை போட்டு வைத்தால் வண்டு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய மிளகாய் வத்தல் அரிசி பருப்பு உள்ள கலன்களில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.

மணமூட்டியாகவும் சுவையூட்டியாகவும் இருக்கும் பிரிஞ்சி இலைகள் பூச்சிகளுக்கு எதிராக செயல்படுவதால் வீட்டில் அரிசி பருப்பு ஆகியவற்றை சேமித்து வைக்கும் கலன்களில் நான்கு அல்லது ஐந்து பிரிஞ்சி இலைகளை போட்டு வைத்தாள் பூச்சி மற்றும் குழு ஆகியவை வராமல் தடுக்கலாம்.