தேனியை மிரட்டி வந்த அரிக்கொம்பன் யானையை கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் தற்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திவந்த அரிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, ஜுன் 6ஆம் தேதி கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டது.

இந்த நிலையில், சரியான உணவு உட்கொள்ளாததால் அரிக்கொம்பனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உடல் மெலிந்து காணப்படும் யானை, விடப்பட்ட இடத்தைவிட்டு வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றி வருகிறது. யானை ஊருக்குள் வராத வகையில் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.