கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக எம்.பி. கனிமொழி உறுதி அளித்தார். கோவையில் பேருந்து ஓட்டுநர் சர்மிளாவை நேற்று காலை திமுக எம்.பி கனிமொழி சந்தித்த நிலையில், ஷர்மிளா பணியிலிருந்து விலகினார். இந்த செய்தி அறிந்த கனிமொழி, தொலைபேசியில் ஷர்மிளாவுடன் பேசினார். அப்போது, அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறிஇருந்தார்.

இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு தான் எப்படி அரசு பணியை வாங்கி தர முடியும் என தூத்துக்குடி திமுக MP கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார். ஷர்மிளாவிற்கு அரசு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘தனியார் துறையில் வேலை வாய்ப்புகளை வாங்கித் தருவது போன்ற உதவிகளை செய்வதாக தான் ஷர்மிளாவிடம் தெரிவித்து இருக்கிறேன். அவரிடம் தொடர்பில் இருக்கிறேன்’ என்றார்.