தமிழக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் அதில் தமிழ்நாடு என்ற பெயரை கூட சொல்லவில்லை. இதனை கண்டித்து திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் டெல்லியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோவை தற்போது முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒரு சில மாநிலங்கள் நீங்களாக பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே தேர்தல் முடிந்து விட்டது. எனவே இனி நாட்டை பற்றி மட்டும் தான் சிந்திக்க வேண்டும். இதை நீங்கள் தான் சொன்னீர்கள். நேற்றைய தினம் நீங்கள் அறிவித்த பட்ஜெட் உங்கள் ஆட்சியை காப்பாற்றும் நோக்கத்தில் அறிவிக்கப்பட்டதை தவிர நாட்டு மக்களுக்காக அறிவிக்கப்படவில்லை. அரசை பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களை பழி வாங்குவதற்காக நடத்த வேண்டாம். மேலும் அரசியல் வெறுப்பு வெறுப்புகளுக்காக அரசை நடத்தினால் தனிமைப்பட்டு போவீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.