
அரசு மருத்துவமனைக்குள் விதியை மீறி பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வரிசையாக காத்திருந்தனர். அப்போது பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை வெளியே நிறுத்தாமல் மருத்துவமனைக்குள் ஓட்டி சென்றார். சிகிச்சை அளிக்க வேண்டியவர் பொறுப்பற்று நடந்து கொண்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
District Hospital of Pilibhit, UP is so big that staff Nurse has to use scooty to travel from one ward to another. God bless the patients. pic.twitter.com/4GtJAaRquJ
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) May 7, 2024