
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பலரும் அதற்கு கண்டனங்களை தெரிவித்ததோடு இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய போது அதனை தட்டி கேட்ட ஆசிரியர் ஒருவரையும் மிரட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலானதால் பள்ளிக்கல்வித்துறை இனி அரசு பள்ளிகளில் அனுமதி இல்லாமல் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது எனவும் இதை மீறும் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது.
இந்நிலையில் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய x பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பள்ளிகளில் இனி நடைபெறும் நிகழ்ச்சிகளை முறையாக வரைமுறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளேன். அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள் போன்றவைகள் தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். அறிவியல் வழியே மாணவர்களுக்கு முன்னேற்றத்தை தரும். மாணவர்கள் எதிர்கால சவால்களை சமாளிக்க சிறப்பான கருத்துக்களே ஆசிரியர்களை எடுத்து கூற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.
எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும்.…
— M.K.Stalin (@mkstalin) September 6, 2024