
பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர். அவர் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்களை எல்லாம் திறந்து மக்கள் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கியதோடு வயிற்றுப் பசியை நீக்க இலவச மதிய உணவும் வழங்கினார்.
ஆனால் தற்போது அரசு பள்ளிகளின் நிலைமையை பார்த்தால் கண்ணீர் தான் வருகிறது. அரசு பள்ளிகளில் சரியான வகுப்பறைகள், கழிவறைகள் இல்லை. அதோடு போதிய ஆசிரியர்கள் கூட இல்லை. அதேசமயம் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்தி அவர்களின் கல்வி கட்டணத்தை ஊக்குவித்து வருகிறது. மேலும் இந்த நிலைமை மாறி அரசு பள்ளியை அனைவரும் தேடிவந்து கற்கும் கோவிலாக மாற்ற வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.