அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் விரைவில் காலை உணவு திட்டம் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்த முதலமைச்சர் முக ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுவது குறிப்பிடத்தக்கது.