நாடு முழுவதும் மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு AICPI தரவுகளின் படி வழங்கப்படுகிறது. இப்போது 7 வது ஊதியக்குழுவின் அட்டவணை மற்றும் ஆலோசனையின் படி தான் மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படியை வழங்கி வருகிறது. மத்திய அரசை பின்பற்றிதான் மாநில அரசுகளும் தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அளிக்கிறது.

2023 ஜனவரி 1 தேதியின் படி வழங்கப்படவேண்டிய DA உயர்வை கடந்த மார்ச் 24-ஆம் தேதி தான் 4 சதவீதம் உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்பின் இப்போது ஹரியானா, ராஜஸ்தான், அசாம், கோவா மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்கள் 4% DA உயர்வை அறிவித்துள்ள சூழலில், தற்போது அந்த பட்டியலில் உத்தரபிரதேச மாநிலமும் இணைந்திருக்கிறது.

அந்த வகையில் 16 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் 11.5 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு DA மற்றும் DR உயர்வை 4 சதவீதம் வழங்குவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் காரணமாக 38% ஆக உள்ள DA இனிமேல் 42% ஆக இவர்களுக்கு கிடைக்கவுள்ளது.