பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படியை 4% உயர்த்துவதாக சென்ற மார்ச் 25ம் தேதி அறிவித்தது. மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்திய அடுத்த நாளே (மார்ச்-26) அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசும் ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கள் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ராஜஸ்தானை அடுத்து மற்றொரு மாநில அரசும் தன் அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது அசாம் மாநிலத்தில் நேற்று (மார்ச் 31) மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனவரி 1, 2023 முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்த அம்மாநில அரசு முடிவுசெய்தது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேசப் மஹந்தா, “நாங்கள் அகலவிலைப்படியை அதிகரிக்க முடிவுசெய்துள்ளோம். அசாம் அரசாங்கத்தின் கீழ் பணியாற்றும் மத்திய (அ) மாநில என அனைத்து ஊழியர்களுக்கும் அடிப்படை ஊதியம், ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 38 சதவிகிதத்தை விட கூடுதல் தவணை 4% அதிகரிக்கும்.