
சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகரில் ஆரோக்கியதாஸ்-நிஷாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ஒரு கும்பல் அரசு நிதி உதவி வாங்கி தருகிறேன் என கூறி நைசாக பேசி நிஷாந்தியை ஆட்டோவில் தியாகராய நகரில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நிஷாந்தியை சாப்பிட வைத்து அவர் கைகழுவ சென்ற போது குழந்தையை தூக்கிக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து நிஷாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் குழந்தையின் தாய் சரியாக பதில் அளிக்க மறுப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.