அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் மாலை நேர நீட் பயிற்சி வழங்கப்படும் என தொழிற்கல்வி இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். மாலை 4 மணிமுதல் 5.30 மணி வரை நீட்  பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளார். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், “ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். “யாரையும் கட்டாயப்படுத்த கூடாது” என தெரிவித்துள்ளார்.

ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் பாடவாரியாக பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், நுழைவுத் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்களின் பட்டியலை உடனே தயார் செய்ய வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.