தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் சுமார் 1.4 கோடி முன்னுரிமைபெற்ற ரேஷன் கார்டுகளுக்கு மாதம்  இருபது கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் சக்கரபாணி  அனைத்து மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அதில் திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் மூலமாக தமிழகத்திற்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும் எனவும் கோதுமை நுகர்வு அதிகமாக இருப்பதால் மாதம் ஒன்றுக்கு 15,000 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் கோதுமை நுகர்வு அதிகமாக இருப்பதால் பிற மாநிலங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. கூடுதலாக 15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை அரிசிக்கு பதிலாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரு ஒரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இரண்டு கிலோ ராகி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு போதுமான அளவு ராகி மற்றும் சிறுதானியங்களை வழங்கினால் மற்ற மாவட்டங்களிலும் இது விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.