தமிழக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தில் 2021 ஆம் வருடம் ஜூலை 1ஆம் தேதி முதல்  2025 ஆம் வருடம் வரை தொகுப்பு வருடத்திற்கு 5 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக 20 லட்சம் வரை கிடைக்கும் என்று அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், கிட்டத்தட்ட 23 வகையான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு 5 லட்சம் வரையிலான காப்பீடும், ஏழு வகையான நோய் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு 10 லட்சம் வரை காப்பீடும், அரிதான நோய் சிகிச்சைகளுக்கு 20 லட்சம் வரை காப்பீடும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலு அரசு ஊழியர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்தால் ஒரு கண்ணிற்கு ரூபாய் 30,000 வீதம்  வழங்கப்படும் எனவும், கர்ப்பப்பை நீக்கம் செய்தால் 50,000 காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காப்பீடு திட்டத்திற்கு அரசு ஊழியர்களுடைய சம்பளத்தில் இருந்து மாதம் 300 ரூபாய்  பிடிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்கள், மதிப்பூதியம் பெற்றவர்கள், தின கூலி ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்ட யாருக்கும் இந்த  காப்பீடு திட்டத்தின் கீழ் பலன்கள் கிடைக்காது.