
தமிழகத்தில் சமீப காலமாக சில அமைச்சர்கள் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அதற்கு பெரும் கண்டனங்களும் வலுத்து வருகிறது. அதாவது அமைச்சர் துரைமுருகன் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில் பின்னர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு அமைச்சர் பொன்முடி முதலில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை ஓசி பேருந்து என்று கூறிய நிலையில் சமீபத்தில் பெண்கள் பற்றி அதாவது உடலுறவு பற்றிய சைவம் மற்றும் வைணவ மதத்துடன் ஒப்பிட்டு பேசியது மிகவும் சர்ச்சையாக மாறியது.
இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்து அமைச்சர் பொன்முடியின் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் சட்டசபையில் அதிமுக அமைச்சர் கே என் நேரு, பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர்களின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அப்போது பொதுவெளியில் அமைச்சர்கள் நிதானமான கருத்துகளைமிகவும் கவனமாக பேச வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அரசாங்கத்திற்கு அவ பெயர் ஏற்படுத்தும் விதமாக அமைச்சர்கள் பேசக்கூடாது என்ற முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மேலும் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் துறை ரீதியான பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.