“நாங்கள் அமைச்சர் பதவிக்காகத்தான் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அப்படி என்றால் நீங்கள் எல்லாம் அரசியலுக்கு சன்னியாசம் செய்யவா வந்தீர்கள்?” என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மிகவும் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் செய்யும் ஒவ்வொருவரும் அதிகாரத்திற்கும், பதவிக்கு வருவதற்கும்தான் நினைப்பார்கள் என்பதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை என்று அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
தவெக உடனான கூட்டணி அல்லது ஆதரவு குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், அரசியல் களத்தில் பதவி என்பது ஒரு இலக்குதான் என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குச் சி.வி.சண்முகம் கொடுத்துள்ள இந்த நேரடிப் பதிலடி, அதிமுகவின் உட்கட்சிப் பூசலைத் தாண்டி, தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
