நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இடத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார். அதனை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமானிடம், ரஜினியை சந்தித்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், அவருடன் நான் நிறைய பேசினேன். அனைத்தையும் பகிர முடியாது. அரசியல் என்பது வாழ்வியல். அதன் மீது ரஜினிக்கு ஆர்வம் உண்டு. ஆனால் அவருக்கு அரசியல் சரிவராது என்று கூறினார். ரஜினியை சந்தித்ததே அரசியல் தான். அரசியல் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. ரஜினியை நான் நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்த நிலையில் தற்போது தான் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் திரைத்துறை மற்றும் அரசியல் குறித்து ஆலோசனை செய்தேன். மேலும் சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன ரஜினியின் சொல்லை ஆதரித்த அவர் அதைத்தான் அமைப்பு தவறாக இருக்கிறது என்று நான் கூறுவதாக கூறினார்.