தமிழகத்தை சுமார் 25 ஆண்டுகள் ஆண்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய 55 வயதில் கடந்த 1972 ஆம் ஆண்டு அதிமுக என்ற தன்னுடைய கட்சியை தொடங்கினார். அதன் பிறகு கட்சி தொடங்கியவர்களின் பட்டியல், 1949 ஆம் ஆண்டு திமுகவின் கால் பதித்த அண்ணாவுக்கு வயது 40. 1989 ஆம் ஆண்டு பாமகவை தொடங்கிய ராமதாஸுக்கு வயது 50. அதன் பிறகு 1991 ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுக்கு 29 வயது. 1994 ஆம் ஆண்டு மதிமுக வைகோவிற்கு 50, பின்னர் சிவாஜி கணேசன் 1989இல் தமிழக முன்னேற்ற முன்னணி.

நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் 1989இல் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்.. நடிகர் டி ராஜேந்தர் 1991 ஆம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம். கேப்டன் விஜயகாந்த் 2005 ஆம் ஆண்டு தேமுதிக கட்சியை தொடங்கிய போது 53 வயது. 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமானுக்கு வயது 44. நடிகர் கமல்ஹாசன் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் கட்சியை தொடங்கிய போது வயது 62. தற்போது நடிகர் விஜய்(49) 2024 தமிழக வெற்றி கட்சியை தொடங்கியிருக்கிறார்.