நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்களின் ஒருவராவார். மகிழ்மதி என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் முன்னதாக தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, எனக்கு அரசியல் ஆர்வம் இருப்பது உண்மைதான், நான் பதவிக்காகவோ தேர்தலில் வெல்வதற்காகவோ அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கவில்லை. சேவை செய்யவே வரவுள்ளேன். மதத்தை போற்றும் கட்சியுடன் இணைய விருப்பம் இல்லை. எந்த கட்சியுடன் இணைய போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்