அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் காணிக்கை பணம் திருடப்பட்டதாக எழுந்த அதிர்ச்சி குற்றச்சாட்டு ஒட்டுமொத்த நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இவ்வளவு பெரிய கோயிலில் பாதுகாப்பு வளையங்களையும் மீறி காணிக்கை திருட்டுப் போயிருப்பது, நாடு முழுவதும் உள்ள ராம பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “கோயில் காணிக்கையைத் திருடிய இந்த மகா பாவிகளுக்கு நீதிமன்றம் மிகக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்திற்குத் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், வரும் 12-ம் தேதி நாடு தழுவிய அளவில் ‘ராம பக்தர்களின் கையெழுத்து இயக்கத்தை’ தொடங்க உள்ளதாகவும் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார்.
