சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்கு தயார் செய்யப்பட்ட உணவுகளை சுவைத்து, வாடிக்கையாளரிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை ரூ.21 கோடி செலவில் மேம்படுத்திட  உத்தரவிட்டுள்ளார்.

சமையலறை மற்றும் உணவுக் கூடத்தை தூய்மையாகப் பராமரிக்கவும், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், சுவையான தரமான உணவை தயாரித்து வழங்கவும் முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.