திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் கட்டப்புளி தெருவை சேர்ந்தவர் ஆனந்த செல்வன்(30). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி  அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆனந்தனிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆனந்தன் சிறுமியிடம் அத்து மீறியது உறுதியானது. இதனால் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.