தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய விழாவில் அவரது மனைவி கலந்து கொள்ளாதது பெரும் பேசும் பொருளாகியுள்ளது.

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்திய விழாவில், அவரது தாய் சோபா மற்றும் தந்தை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இருவரும் பந்தலில் பொதுமக்களுடன் இணைந்து அமர வைக்கப்பட்டிருந்தனர். விழா முழுவதும் தனது பெற்றோருடன் பேசாமல் இருந்த விஜய், கடைசியில் சில நொடிகள் மட்டுமே அவர்களுடன் உரையாடினார்.

இதுமட்டுமின்றி, விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகள் இந்த விழாவில் கலந்து கொள்ளாதது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.