திருச்சியை சேர்ந்த தமீம் என்பவர் தனது மனைவி ரியாதா பேகம் மற்றும் மகளுடன் துபாயில் வசித்து வருகிறார். இவர்களது மகன் முகமது உமர் வண்டலூர் அப்துல் ரகுமான் கிரசன்ட் கல்லூரி விடுதியில் தங்கி வீட்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தீபாவளிக்கு விடுமுறை விடப்பட்டதால் பல மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். ஆனால் உமர் தனது குடும்பம் துபாயில் இருப்பதால் ஊருக்கு செல்ல முடியாமல் கடந்த மூன்று வருடங்களாகவே விடுதியில் தங்கி இருக்கிறார். இதனால் மன உளைச்சலில் இருந்த உமர் விடுதியின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கல்லூரி காவலர்கள் உமரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உமர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் உமர் அறையில் இருந்த கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் மூன்று ஆண்டுகளாக குடும்பம் இல்லாமல் தனிமையில் இருப்பதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள போவதாக உமர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.