நடத்தை மீது சந்தேகப்பட்டு கணவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சங்க்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மங்கேஷ் சந்திரகாந்த். இவரது மனைவி பிரஜக்தா. மங்கேஷ் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. அப்போது கோபத்தில் மங்கேஷ் பிரஜக்தாவின் கழுத்தை கயிறால் இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு பிரஜக்தாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி மின் பம்ப் பெட்டியில் பதுக்கி வைத்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தைகள் மங்கேஷின் சகோதரரிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர். அவர் சந்தேகத்துடன் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது ஒரு அறையில் ரத்தக்கறைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சிடைந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துண்டு துண்டாக பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த உடற்பாகங்களை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மங்கேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.