
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் திடீரென புலி சாலையை கடந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு புலி சாலையை கடந்து சென்றது.
அந்த வழியாக காரில் சென்ற நபர்கள் புலியை பார்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் புலியை கவனிக்காமல் வாகனத்தை இயக்கியுள்ளனர்.
As long as one doesn’t have a back gear in the bike, use common sense in the back of your mind & drive slow in wild habitats.#viralvideo pic.twitter.com/o4iCBpYf4L
— Viral News Vibes (@viralnewsvibes) April 21, 2025
பின்னர் அவர்கள் புலி நின்று கொண்டிருந்ததை பார்த்து சடன் பிரேக் பிடித்து வாகனத்தை பின்னோக்கி இயக்கியுள்ளனர். சற்று நேரம் தாமதித்திருந்தால் அவர்களது உயிருக்கே இது ஆபத்தாக முடிந்திருக்கும்.
இதனை கார் ஓட்டுநர் மொபைலில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. காட்டுப்பாதையில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.