
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டத்தில் குண்டூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியர்களாக சைனஜா பேகம் மற்றும் லட்சுமி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் போது தட்டில் முட்டை வைத்தனர். அதன் பின் அதனை போட்டோவாக எடுத்தனர். பின்னர் தட்டில் இருந்த முட்டையை இருவரும் எடுத்துவிட்டனர்.
அதாவது குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பாகவே ஊழியர் அனைத்து முட்டைகளையும் எடுத்துவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக முட்டை வழங்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.