இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7 ஆம் தேதி முதல் இன்று வரை 12 நாட்களை கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதினும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். அப்போது காசாவில் வன்முறை தொடராமல் தடுக்கும் விதத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டியதாக ரஷ்ய வெளிவகார அமைச்சகம் கூறியுள்ளது.

புதினுடன் மட்டுமல்லாது எகிப்து, சிரியா, ஈரான் மற்றும் பாலஸ்தீனிய தலைவர்களுடனும் நெதன்யாகு தொலைபேசி மூலமாக பேசியுள்ளார். புதினுடன் நெதன்யாகு பேசிய போது தற்போதைய நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை தொடர ரஷ்யா விரும்புவதாக கூறியதோடு, அமைதியான தீர்வை காண வேண்டும் என்றும் தெரிவித்ததாக தி மாஸ்கோ டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.