கடந்த 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் இருந்தபோது செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மொத்தம் 2,222 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சிகள் எத்தனை பேர் அரசு பொறுப்புகளில் உள்ளனர் உள்ளிட்ட விவரங்களை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் உள்துறை செயலாளரை ஒரு எதிர் மனுதாரராக இணைத்து நோட்டீஸ் பிறப்பித்து பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.