இந்தியாவின் முன்னணி வர்த்தக தளமாக திகழும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் மக்களுக்காக அதிரடி ஆஃபர் வழங்கி வருகின்றன. இதில் ஏராளமான பொருட்கள் குறைந்த விலையில் தள்ளுபடியில் வழங்கப்படும். அதன்படி தற்போது அமேசான் ப்ரைம் டே சேல் தொடங்க உள்ளது.

பிரைம் உறுப்பினர்களுக்கான இந்த பிரத்தியேக விற்பனை ஜூலை 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும். நேற்று நள்ளிரவு இந்த விற்பனை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ஐபோன் 13 பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கிறது. OSED திரை மற்றும் Apple Bionic A15 சிப் உடன் வரும் இந்த போன் விற்பனையின் ஒரு பகுதியாக 48,799 ரூபாய்க்கு கிடைக்கிறது. வங்கி சலுகையுடன் வாங்கினால் மேலும் ஆயிரம் ரூபாய் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.