இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் எனப்படும் இணையதள வணிகத்தில் அமேசான் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் விஜயதசமி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் என்ற பெயரில் பல சலுகைகளுடன் பொருட்களை விற்பனை செய்கின்றது. அதன்படி இந்த வருடம் அமேசானின் விழாக்கால அதிரடி சலுகை விற்பனை வருகின்ற அக்டோபர் எட்டாம் தேதி தொடங்குகிறது. அமேசான் லைவ் முதல் புதிய பொருட்கள் அறிமுகம், தள்ளுபடி சலுகைகள் வரை இந்த ஆண்டு அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் சிறந்த ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் அமேசான் விழாக்கால சலுகையை முன்னிட்டு 5 ஜி மொபைல் போன்கள் 8999 ரூபாயிலிருந்து சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் 5699 ரூபாயில் இருந்தும் கிடைக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் 99 ரூபாய் இருந்து தொடங்குகின்றது. வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. டிவிக்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி, வீட்டில் சமையலறை பொருட்கள் 49 ரூபாயிலிருந்தும் அழகு சாதன பொருட்கள் ஐம்பது முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் டிவி மற்றும் லேப்டாப் உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவதற்கு எளிய மாத தவணை வசதியும் வழங்கப்பட உள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.