
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு வாலிபரை துரத்தி கொண்டும் அவரின் பின்னால் மற்றொரு வாலிபர் ஓடும் காட்சியும் வீடியோவாக வெளியாகி உள்ளது. பின்பு வாலிபரை துரத்திச் பிடித்த அந்தப் பெண் அவரின் முகத்தில் குத்தும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
அந்தப் பெண் துரத்தி செல்லும்போது அதனைப் பார்த்த போலீசார் அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் கூறியதாவது, நானும் திருப்பூர் அவிநாசிபாளையத்தைச் சேர்ந்த அந்த இளைஞரும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்தோம்.
எனவே 9 மாதத்திற்கும் மேலாக நாங்கள் இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்தோம். கடந்த 9 மாதங்களில் இதுவரை மூன்று வீடுகள் மாறி ஒன்றாக தங்கி இருந்தோம். இந்த நிலையில் அவரிடம் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது அதற்கு மறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனால் அவரின் நண்பர் மூலம் தொடர்பு கொண்டு அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதிக்கு வரவழைத்தேன். அங்கு வந்த அவரிடம் என்னை திருமணம் செய்து கொள் என கேட்டபோது அவர் என் பெற்றோரிடம் பேச வேண்டும் என கூறினார்.
9 மாதங்கள் திருமணமே செய்யாமல் குடும்பம் நடத்திய போது மட்டும் இனித்ததா? என்று முகத்தில் குத்தியதாக அந்தப் பெண் கூறினார். அப்போது அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.